Sunday, November 8, 2009

**விருட்சமாகும் ... கனவு..'கள்**!


வீரிய வித்துக்குள்ளே விந்தை நிறை விருட்சமொன்று
விந்தையாய் மூச்சடக்கி முனகலிட ;
ஒற்றை தண்ணீர் துளி தந்த தழுவளிதத்தில்
விசுக்கென்று வேர்கொள்ள
பொசுக்கென்று பற்றி கொண்டது மண் !
*******************************************
மண்ணின் வாசத்தில் ….
அரவமில்லா அரவணைப்பில் …
விண் ஒளியின் விசுவாச மோகத்தில் …
வேருக்குள் சுவாசம் மோகனம் இசைத்தது !
*****************************************
இசைந்து மண் …!
இளகி … இளகி … இறுக்கியது வேரினை !!
சங்கீத சாம்ராஜ்யம் ஒன்று ,
இயற்கையின் இரகசிய சிணுங்கல்களை
இதம் பதமாய் மெட்டிசைத்து மெருகேற்ற
மந்தார மதுரசத்தை உறிஞ்சி உறிஞ்சி
வளருது விருட்சம் !
******************************************
தன் -
வடிவம் மாற்றி வனப்புகூட்டி
பூத்து … காய்த்து …கனிந்து …
கும்மாளமிட்டு குதூகளிக்கும் கருமரம் கண்டு ..,

*******************************************
இளைப்பாறுது மண் …!
இசைந்தாடுது தென்றல் …!!
மழை தூவுது முகில் …!!!
*******************************************
வேர்வெடித்த வித்தின் தவத்திற்கான வரமாய்
அன்பொழுக ஆனந்த பூச்சொரியும்,
**விருட்சங்கள்** …,

இங்கே –
பூமித்தாயின் தார்மீகப் புன்னகை !
கொண்டல்களின் சில்லிப்பு சிலிர்ப்புகள் !!
ஆற்றுக் கன்னிகை தாளக் கூத்தாட
சந்தக் கவிபாடி …
தாளம் இசைக்கும் வித்துவான்கள் !!!
********************************************

No comments:

Post a Comment