Sunday, September 27, 2009

'ஓர் மகரந்தக் கனவு'

அது *–
ஒரு
பொன் ஒளிரும் வேளை ,

* புது மையல் பூ உதிர
புறம் நெகிழ அகம் அவிழ …

அன்பூரி …ஆர்ப்பரித்து …
அமுதிதழில் நனி தேனாய்
வழிந்தோடி …வாழ்வளிக்க ;

* உணர்வுக்குள் உயிர்ப்பாய் -ஓர்
தெய்வீகத் தேரோட்டம்

*உருஞ்சுக் குழல் திரவியமோ
ஊது குழல் மது இரசமோ

*பேரானந்தச் சுவை இதுவோ
கதிர் ஒளியோ தண்மதியோ
முகில்தென்றல் மலரிசையோ ….

*மது வண்டுப் புனலாட
மயங்குத் தமிழ் மொழிமறந்து
ம்ம் ……என்றே …இசைத்திருக்க
துகில் மேவும் புனிதங்கள்
துள்ளித் தழைத்துப் பூத்திருக்க

*வானத்து மீன்கூட்டம்
மகரந்த மடிநிறைக்க …,

*முகிலிடை வெங்கோடியோ
முரசொலித்து ஒளியூட்ட
முத்தொளிரும் மாமணிகள்
மனச் சுனையில் முத்தெடுக்க
முகிழ்ந்தாடும் மாமதுர நீராட்டம்

*தாழை மடல் விரிய
செந்தூரம் இதழ்பதிக்க
சில்லரும்புச் சோலை - என
சிந்து கவி பாடும்

‘*ஓர்* ’

*ஆழ் அன்பின் …. ‘அரங்கேற்றம் !’.

Sunday, September 20, 2009

ஒரு' ஆன்ம சினுங்கல்!


இதோ –
இந்தப் புனித சலனம்
தூரிகை சாரலாய்
சிணுங்கத் தொடங்கிவிட்டது!

மனதின் தழுவல்களே
உயிர்த்தெழுங்கள் !
சுகமாய் சுகந்தமாய்
நுகர்ந்த்தெடுத்துக் கொள்ளுங்கள்..!


மூக்குத்தி பூங்க்கொத்துகளே !!
அன்பின் ஆழத்திற்குள்
வசித்திருக்க தடமிடும்,
மின்மினிக்கு …வழி விடுங்கள் !!

Sunday, September 13, 2009

'மன'வாசம் !


கண்களுக்குள் கண்ணியமாய்
கருவாகி ;
உயிர்ப்பாய் உறைந்திட்ட ,
புது மனமே !
புத்தெழிலே !!
நின் -
வசந்த ராகம்
வாஞ்சையாய்
வருடி..வருடி ..
எனை
செதுக்கியதில் ….

காதல் மெய் சிலையாய்
கனிமலர் பூம்பொளிவாய்
மனதின் மொழி எழுதி ,


விழிகள் வியர்க்க …
உதிரம் உவப்ப …
விரகம் கரைய கரைய …


கனலேந்தியக் கட்டுமரமாய்
கனன்றுக் கிடக்கிறேன் ;
கலையொழுகக் கசிந்தழுது
காத்துக் கிடக்கிறேன் !!!

கண்ணிமைக்கும்
காவியமே !
கை கோர்க்கும்
ஓர் உறவே !!

உரிமை கொள்ள வாராயோ ?
உயிர் கொடுத்து மீளாயோ ?

பூ மரத்து அசைவொலியாய்
அரவணைத்து ஆட்கொள்ளும்
பிஞ்சுத் தமிழ் இதமே
கொஞ்சு மொழி அழகே
கனிந்திடுவாய் .. கண்ணியமே …

மருக்கொழுந்து


தெள்ளருவி உயிர்சுவையை
துளிர்கரம் ஏந்தி நிற்க !
மகரந்தத் தேனூறி -இதழிதழாய்
மனமெங்கும் மலர்ந்து நிற்க !!

மதுரசத்தின் மனமெலாம் நிறைத்து …
மகிழம் பூக்களின் மந்தகாசமாய் …
மருக்கொழுந்தாகி மலர்கிறேன் !!

சுனை இதமோ…சுவைகுறைவோ ..,
சுவாச சுகந்தமோ …வெற்றுச் சொல்லடுக்கோ ..,
என்னமெதுவோ? - நின்
இதய சுட்டுகளுக்காய்
விழியேங்க விழித்திருக்கிறேன்.

‘வார்த்தை வருடல்களை வழங்கிடுவாய் ’
“சத்தாகவும் !...வித்தாகவும் …!!”