
ஒவ்வொரு நாளும்
உன்னை
உறக்க அழைத்து
ஓய்ந்த பின்புதான்
உறங்க செல்கிறேன்.
விடை தெரியா
சோகை விடியல்கள்
இமை சேர்க்க
எனக்குள் நானே
வினாக்களாகத்
தொக்கி நிற்கிறேன்
விளையாட்டாய் நீ
உதிர்க்கும் ஒரு வார்த்தை
என் உயிர் உறிஞ்ச
மதி மரித்த மது வண்டாய்
உலவித் திரிகிறேன்.
அன்பே ! – இப்படி
அழைத்தது நீதான்
கனவில்தான் என்றபோதும்
என் நினைவு மறக்கிறேன்
என் பொழுதுகள்
நின்னையே விழுதெனப்
பற்றிக்கொண்டன .
நின் மடிதேடியே
மலர்ந்து தவிக்கும்
என் உணர்வுப் பூக்களின்
வாசம் நனைத்திட
மழை என வருவாயோ !
சுவாசம் நிறைத்திடும்
உறவென வருவாயோ !
இன்னல் இரவுகளின்
துன்பம் தொலைந்திட
எதுவாகினும் …
‘சுனை நீரில் சங்கமிக்கும்
இளம் தென்றலாம் …
என் தவங்கள் உனக்காக .
No comments:
Post a Comment