
முகிலிதமே … மனதுயிரே !
முழு மூச்சாய் சேகரித்து
மூச்சடக்கி முடக்கிவைத்த
என் நெஞ்சத்து நேசமெல்லாம்
நின் நிழல் கண்ட ஓர் நொடிக்குள்
நூராயிரம் வேர் வெடிக்க
ஓர் பூவாய் பூத்திருக்கு !
உளம் பிளந்து
உயிர் திணித்து
வேர் பிடிக்க
இளமை உறிஞ்சும்
உணர்வுப் பூவே – இதோ
கீழிமையோரம் தளும்பி நிற்கும்
என் விம்மல்களின் மிச்சம் …
பகற் கனவுகளின்
பல்லாங்குழி ஆட்டத்தில்
வெம்பி விழுந்து இற்றுப்போன
வெற்றுப் பார்வை …
விடைத்து சிவந்து
கருத்துத் துடிக்கும்
நாசிக் குருக்குகள் …
வெறுமை விடியல்களில்
குடைசாயும்
நிகழ்கால நிமிடங்கள் …
இப்படியாகத்தான்
என்னில் எனில் …
‘நீ ’ மலர்ந்தது நிசம்தானா ?!
நேசமே !
No comments:
Post a Comment