Tuesday, June 22, 2010

முக்கனி


அன்பே !

என் மனதின் கதறல்களை

உன் கண்ணீருக்கு சமர்ப்பிக்கிறேன்

அழுது தீர்த்துவிடு .


அழகே …

என் களங்கமில்லா காதலை

உன் நெஞ்சுக்குள் விதைக்கிறேன்

நேசத்தால் நீவிவிடு .


அறிவே …

என் கண்ணோர கனவுகளை

உன் கனிவோடு கலக்கிறேன்

நம்

கம்பீரக் கலை எழுது .

2 comments:

  1. நன்றாயிருக்கிறது கவிதை.இன்னும்....... காதல் மட்டுமே பாடு பொருள் என்றால் மற்றதெல்லாம்,,,,,? காதலைத் தவிர்த்தும் நிறைய இருக்கிறது எழுதுங்கள் சார்.

    ReplyDelete
  2. காதல்...
    மனதின் 'மணம்'
    மௌனத்தின் 'மொழி'
    உயிரின் 'நாதம்'
    உணர்வெழுதும்...'ஓவியம்'
    சுவாசத்தில் அதன் வாசம்,அவ்வளவே.
    ...எனினும் தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
    ( இந்த எழுத்துக்கள் வாசிக்க மட்டுமல்ல,"வசிப்பதற்கு" )

    ReplyDelete