![]() |
*என்...
'தொடி'யொலியில்
துயில் எழுகிறாய்;
தேனீராய் தளும்புகிறேன்...
*இமை சிறகு விரிக்கிறாய்
எடை இழந்து வியர்க்கிறேன்...
*எழுந்ததும் உள்ளங்கை பார்க்கும்
வழக்கம் உனக்கு-அதில்
என் நெற்றித் திலகம் நிறையனுமே
வாஞ்சையோடு நின்
புறங்கை நோக்குகிறேன்...
*ஒற்றை விரலால் மோவாய் தாங்கி
நுனி மூக்கில் சீண்டிவிட்டு
கண்ணொளிர நகைக்கிறாய்-என்
கண்ணுதிர்த்து ஆராதிக்கிறேன்.
விடியல்...!வெட்கச் சிவப்பில்...!!
No comments:
Post a Comment