Thursday, December 16, 2010

* நீர்க்குமிழி *

நினைவுகளின் நீர்க்குமிழிகளே..!
நிற்காதோ உம் நடனம்?!

நேசமிகு பொழுதெல்லாம் நின்
குமிழிக்குள் பொத்தி வச்சேன்..!

வண்ண வண்ண மிளிரல்களை
வாயூர இரசித்திருந்தேன் ...!!

"நீ"...
வெடித்து சிதறுகையில்...
உயிர் கூட்டில் போட்டு வச்ச
மாக்கோலம் பாழாச்சே...!

நெஞ்சத்தின் சித்திரத்தில்
செதுக்கி வச்ச புன்னகையும்
போன இடம் புரியலையே...?!

நனிச் சிறப்பே..! நேசமே..!!
நிம்மதியின் வாசல் வழி
வரமறுக்கும் நித்திரையே...!
பேரொளிக்கு ஏங்கும்
பெருவெளியின் பாழ் இருட்டே...!

என் சிந்தை தளும்பும்
உணர்வுத் திமிறல்களை
மீட்டெடுக்க வாரீரோ...??

ஒப்புமைக் கடங்காத
நித்திய நிசங்களினை....
தொடுத்தெடுத்துத் தாரீரோ...?

3 comments:

  1. உணர்வுகளை நினைவுகளில் சுமந்து மடைத்திறந்து வரும் காட்டாற்று வெள்ளமென நானுணர்ந்த உங்கள் வரிகள் சுமை சுமக்கின்றன

    ReplyDelete
  2. "தமிழின் மணம் தரணி எங்கும் பரவ தவமிருக்கும் இந்த மகிழம்பூவின் மணம் உங்கள் சுவாசம் தொட வழிவிடுங்கள் , வர விடுங்கள்".

    தடைகள் தகரட்டும் விழித்திருக்கும் விழிவழிதிறக்கும் தொடருங்கள் உங்கள் தமிழ் பணியை

    ReplyDelete
  3. thank u mr.dinesh.once again thank u for your encouragement.

    ReplyDelete